சுடச்சுட

    

    குமரியில் சர்வதேச புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

    By கன்னியாகுமரி,  |   Published on : 20th October 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மருத்துவ மிஷன் 175ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நெய்யூர் சர்வதேச புற்றுநோய் மையம் சார்பில் மகளிர் மற்றும் குழந்தைகள் புற்றுநோய் குறித்த சர்வதேச கருத்தரங்கு கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

    கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து குமரி சி.எஸ்.ஐ. பேராயர் தேவகடாட்சம் பேசியதாவது:

    தென்னிந்திய திருச்சபையின் கீழ் இயங்கி வரும் கன்னியாகுமரி மெடிக்கல் மிஷின் ஆரம்பிக்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, நடைபெறும் இந்த சர்வதேச கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 700-க்கும் அதிகமான மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர், அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இம்மருத்துவமனையில் புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், காசநோய், மனநலம் குன்றியோர், காது கேளாதோர், கண் பார்வை பாதிக்கப்பட்டோர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    குழந்தைகள், பெண்கள் அதிகமாக சிகிச்சை பெறுகின்றனர். நவீன உபகரணங்கள் மூலம் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் 35 வயது தொடங்கி, 64 வயது வரையிலான பெண்கள் மார்பகப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இம்மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை, உணவு, தங்கும் வசதி அளிக்கப்படுகிறது. மேலும், தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 4,500 பேர் பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். ஆண்டுக்கு 1,200-க்கும் அதிகமாக புதிய நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் என்றார் அவர்.

    தொடக்க விழா நிகழ்ச்சிக்கு தென்னிந்திய திருச்சபை (செனாய்டு) பொருளாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்தார்.

    நெய்யூர் புற்றுநோய் மைய மருத்துவர்கள் ராஜேஷ் சத்யன், சுதாகரன், கிறிஸ்டாபெல் ரீனா, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுபாஷினி ஜான், நாகர்கோவில் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவர் சித்ரா, நாகர்கோவில் கோபாலபிள்ளை மருத்துவமனை மருத்துவர் சுமித்ரா ரகுவரன், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் கே.எல். ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai