சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் தொடர் மழை:பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடல்

    By நாகர்கோவில்,  |   Published on : 20th October 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன. திற்பரப்பு பகுதியில் அதிகபட்சமாக 102.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,019 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 727 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

    இதுபோல், சிற்றாறு-1 அணைக்கு 372 கனஅடி தண்ணீரும், சிற்றாறு-2 அணைக்கு 269 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளங்கள் நிரம்பி வருகின்றன. பழையாறு மற்றும் பாசனக் கால்வாய்களில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பாசனத்துக்காக திறக்கப்பட்ட பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன. சிற்றாறு-1 அணையில் இருந்து மட்டும் 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவாகி உள்ள மழை ( மி.மீ அளவு).

    பேச்சிப்பாறை- 42.2, பெருஞ்சாணி-41.2, சிற்றாறு 1- 43.6, சிற்றாறு 2- 49.2, பொய்கை - 28.7, மாம்பழத்துறையாறு- 32, நாகர்கோவில்- 32.2, பூதப்பாண்டி-28.7, சுருளோடு 35, கன்னிமார்- 25.6, பாலமோர் 32.8, மயிலாடி- 75.2, கொட்டாரம்- 78.4, ஆனைக்கிடங்கு- 34, குளச்சல்- 38.6, குருந்தன்கோடு- 71.6, முள்ளங்கினவிளை- 37, புத்தன் அணை- 40.8, திற்பரப்பு- 102.4.

    இந்த மழையினால் குமரி மாவட்டத்தில் உள்ள சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட சாலைகள் இப்போது பழுதடைந்து வருகின்றன. மழையினால் வயல்களில் உள்ள நாற்றுகள் தண்ணீரில் மிதக்கின்றன.

    செங்கல் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழில் முடங்கியது. நாகர்கோவில் நகரில் உள்ள சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai