Enable Javscript for better performance
கொல்லங்கோட்டில் பாஜகவினர் தூய்மைப் பணி- Dinamani

சுடச்சுட

    

    கொல்லங்கோடு பேரூராட்சிப் பகுதியில், பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின்படி தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதையொட்டி, அப்பகுதியில் சாலையோரக் குப்பைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து பேரூராட்சியின் 8ஆவது வார்டு பகுதியில் மரகன்று நடப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு கொல்லங்கோடு நகர பாஜக செயலர் சிவகுமார் தலைமை வகித்தார். முன்சிறை ஒன்றியச் செயலர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கட்சியின் மாவட்டத் தலைவர் சி. தர்மராஜ் மரக்கன்று நட்டார்.

    இதில், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பத்மகுமார், கொல்லங்கோடு நகரத் தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் பூபதி, முன்சிறை ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரமணன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai