சுடச்சுட

  

  கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி புதிய ரக சேலைகள் அறிமுகம்

  By நாகர்கோவில்,  |   Published on : 20th October 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தீபாவளி பண்டிகையையொட்டி, நாகர்கோவிலில் உள்ள குமரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற புதிய ரக சேலைகள் அறிமுக விழாவில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் டி.என். வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில், தீபாவளி பண்டிகையையொட்டி புதிய ரக சேலைகள் அறிமுக விழா மற்றும் குமரி மாவட்டத்தில் தங்க மழை திட்டத்தில் பரிசு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடை

  பெற்றது.

  விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் முன்னிலையில், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் டி.என். வெங்கடேஷ் குத்துவிளக்கேற்றி புதிய ரக சேலைகளை அறிமுகப்படுத்தி, முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தார்.

  அப்போது அவர், 2013-2014ஆம் ஆண்டில் ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் ஜவுளிகள் வாங்கிய கூப்பனில் சிறந்த பழமொழிகளை எழுதிய முதல் 3 பேருக்கு தலா 8 கிராம் தங்கமும், இரண்டாவதாக 2 பேருக்கு தலா 2 கிராம் தங்கமும் வழங்கிப் பேசியதாவது:

  2013-2014ஆம் ஆண்டில் ரூ. 301.44 கோடி அளவுக்கு கோ-ஆப்டெக்ஸ் சில்லறை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதில், திருநெல்வேலி மண்டலத்தில் 2013-2014ஆம் ஆண்டில் ரூ. 30 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.

  கடந்த தீபாவளிக்கு திருநெல்வேலி மண்டலத்தில் ரூ. 16 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. 2014ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரூ. 24 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த தீபாவளிக்கு ரூ. 5 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்த தீபாவளிக்கு ரூ. 8 கோடிக்கு விற்பனை செய்ய குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

  விழாவில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் எம். மரிய அந்தோனி, மண்டல மேலாளர் பிரம்மநாயகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. அண்ணா, மேலாளர் மனோகரன் ஆகியோர் கலந்து

  கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai