சுடச்சுட

    

    தென்னை மரம் முறிந்து மின்கம்பியில் விழுந்தது

    By கன்னியாகுமரி,  |   Published on : 20th October 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி செல்லும் முக்கிய சாலையான லீபுரம் சந்திப்பில், ஞாயிற்றுக்கிழமை தென்னை மரம் வேறோடு சாய்ந்து உயர் அழுத்த மின்கம்பியின் மீது விழுந்தது. இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த 4 நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலையில் பலத்த மழை பெய்ததையடுத்து, லீபுரம் சந்திப்பில் உள்ள தென்னை மரம் வேறோடு சரிந்து, உயர் அழுத்த மின்கம்பியில் விழுந்தது. இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி மின்கம்பியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மின்சாரம் தடைபட்டதோடு, போக்குவரத்தும் பாதிப்படைந்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai