சுடச்சுட

  

  குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருவதால், தீபாவளி வியாபாரம் மந்தமாக நடைபெறுகிறது.

  தீபாவளி பண்டிகை புதன்கிழமை (அக். 22) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஜவுளி, தங்க நகைகள், பட்டாசு வியாபாரம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

  கடந்த மூன்று நாள்களாக மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நாகர்கோவிலில் தீபாவளிக்கு பொருள்களை வாங்க பஜாரில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தொடர் மழையால் எதிர்பார்த்த வியாபாரம் நடைபெற வில்லை என்கின்றனர் வியாபாரிகள்.

  மேலும் பட்டாசுக் கடைகள் வைக்க கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டை விட நாகர்கோவிலில் இந்த ஆண்டு பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கையும் எதிர்பார்த்த அளவில் இல்லை என்கின்றனர் பொதுமக்கள்.

  எனினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பட்டாசு கடைகளின் வியாபாரம் மந்தமாக காணப்படுகிறது. பொதுவாக இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் மழையினால் சூடுபிடிக்கவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai