சுடச்சுட

  

  குமரி இலக்கியக் கழகம் சார்பில் கவிஞர் சீதாராமன் எழுதிய பத்துக்குறள் பரம்பொருள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கொட்டாரத்தில் நடைபெற்றது.

  விழாவுக்கு, கேரள திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர் ஏ.எம்.டி. செல்லத்துரை தலைமை வகித்தார். குமரி இலக்கியக் கழகத் தலைவர் கவிஞர் தொல்காப்பியன், தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் பாஸ்ரீ வரவேற்றார்.

  புதிய நூலை, பி.சி.அன்பழகன் வெளியிட, நூலாசிரியர் கவிஞர் சீதாராமன் பெற்றுக் கொண்டார். விழாவில் பி.சி. அன்பழகன் பேசியதாவது: பண்டைய காலத்தில் ஓவியம், பேச்சு மூலமாக காதல் மொழி, கவிதையாக பேசப்பட்டு வந்தது. கவிதை மனம் கொண்டவர்களிடம்தான் கருணை இருக்கும். இளமை கவர்ச்சியே முதுமை பருவங்களில் மலரும் கவிதைகளாக மணம் பரப்பும். வாழ்க்கையில் லட்சியத்தை படிக்கட்டுகளாக கொண்டு முன்னேறவேண்டும். லட்சியம் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றார் அவர்.

  விழாவில் தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ், ஆய்வுக் களஞ்சியம் ஆசிரியர் எஸ். பத்மநாபன், கவிஞர் முருகரசு, குமரி இலக்கியக் கழக பொருளாளர் எஸ். சதாசிவம், அமைப்பாளர் டி. பொற்செழியன், தமிழாலயம் நிறுவனர் புலவர் கே. பச்சைமால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai