சுடச்சுட

    

    களியக்காவிளை அருகே வீடு புகுந்து, பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற மர்மநபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    களியக்காவிளை அருகேயுள்ள அதங்கோடு, விண்ணூர்பழஞ்சி குழிஞ்ஞான்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கட்டடத் தொழிலாளியான இவர், தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். இவரது மனைவி வசந்தகுமாரி (50). இவர் வீட்டில் படுத்திருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, வீட்டினுள் புகுந்த மர்மநபர் வசந்தகுமாரியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு, வீட்டின் மேசையில் வைத்திருந்த ரூ. 4 ஆயிரத்தையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றாராம்.

    இதுகுறித்து, வசந்தகுமாரி களியக்காவிளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai