சுடச்சுட

    

    மலைப் பகுதியில் தீவிர மழை:ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

    By குலசேகரம்  |   Published on : 20th October 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் பெய்து வரும், தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி, கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோரப் பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளில் மழை தீவிரமாகப் பெய்து வருகிறது.

    இந்த மழையின் காரணமாக கோதையாறு, பரளியாறு, தாமிரவருணியாறு, பழையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. திற்பரப்பு அருவிக்கு வரும் கோதையாற்றிலும் வெள்ளம் கட்டுக்கடங்காமல் கொட்டுகிறது.

    அருவியில் குளிக்கத் தடை: திற்பரப்பு அருவியில் அதிகமாக வெள்ளம் கொட்டும் நிலையில், அருவியில் குளிக்க ஞாயிற்றுக்கிழமை காலையில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    வேகமாக நிரம்பும் அணைகள்: மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    ரப்பர் பால்வடிப்பு பாதிப்பு: தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் ரப்பர் பால்வடிப்பு மற்றும் செங்கல் தயாரிப்புத் தொழில்கள் முடங்கியுள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai