சுடச்சுட

  

  மாணவர்களுக்கு ரூ. 5 லட்சத்தில் உதவித்தொகை வழங்கல்

  By தக்கலை  |   Published on : 20th October 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமா-அத் கூட்டமைப்பு கல்வி குழு சார்பில் 191 மாணவ, மாணவியருக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி ரூ. 5 லட்சம் ஊக்கதொகை மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கினார்.

  திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு அலுவலகத்தில், மாவட்டத்திலுள்ள 50 முஸ்லிம் ஜமா-அத்துகளில் 2012, 2013 கல்வி ஆண்டுகளில் 10, 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு, மற்றும் ஊக்கத்தொகை, கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

  கூட்டத்துக்கு, மாவட்ட முஸ்லிம் ஜமா-அத் கூட்டமைப்பு கல்வி கமிட்டி ஒருங்கிணைப்பாளர் எச். ஷாஜஹான் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி கமிட்டி பொருளாளர் எஸ். அப்துல் லத்திப் முன்னிலை வகித்தார். திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமா-அத் இமாம் மௌலவி எப். ஷாஹூல் ஹமீது அன்வரி கிறாஅத் ஓதினார். தமிழ்நாடு முஸ்லிம் அகாதெமி பொதுச் செயலர் எஸ். ஜாபர் அலி, குமரி மாவட்ட ஜமாஅதுல் உலமா பேரவைத் தலைவர் ஆர்.என்.கே. அபூஸாலிஹ் ஆலிம், திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரிச் செயலர் எச். முகம்மது அலி, நாகர்கோவில் ஐ.எஸ்.இ.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் எம். அசீம், திருவிதாங்கோடு ஐ.எம்.எஸ். தாளாளர் ஜே. உதுமான்மைதீன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

  விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம். அக்பர்அலி, மாவட்ட ஜமாஅத்-ஐ சேர்ந்த 191 மாணவ, மாணவியருக்கு ரூ. 5 லட்சத்தில், கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

  நிகழ்ச்சியில், கல்விக்குழு உறுப்பினர்கள், ஜமா-அத் தலைவர்கள், செயலர்கள், கூட்டமைப்பு நிர்வாகிகள், மாணவ, மாணவியர், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai