சுடச்சுட

  

  ஏற்றக்கோடு புனித சவேரியார் ஆலயத்தில் முப்பெரும் விழா

  By குலசேகரம்,  |   Published on : 21st October 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   திருவட்டாறு அருகே ஏற்றக்கோடு புனித சவேரியார் ஆலயத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.

  ஏற்றக்கோடு புனித சவேரியார் ஆலயத்தில், வின்சென்ட் தே பவுல் சங்க குலசேகரம் வட்டார சபையின் 9 ஆவது ஆண்டு விழா, ஏற்றக்கோடு கிளை சபையின் 19 ஆவது ஆண்டு விழா, பிரான்சிஸ் நினைவு கல்விக் கடன் திட்ட தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றன.

  விழாவையொட்டி கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்றக்கோடு சவேரியார் ஆலய அருள்பணியாளர் அன்பரசன் தலைமை வகித்தார். ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், பிரான்சிஸ் நினைவு கல்விக் கடன் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். இதில் வின்சென்ட் தே பவுல் சங்க ஏற்றக்கோடு கிளைத் தலைவர் சத்தியாதாஸ், துணைத் தலைவர் கிறிஸ்துதாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

  எழில் சேவியர் வரவேற்றார். வட்டார சபைச் செயலர் ஏ.ஜே.எம். ராஜா அறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் அருள்பணியாளர்கள் மனோகியம் சேவியர், அஜன் சார்லஸ், மார்ட்டின், சகாய வில்சன், டங்ஸ்டன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

  வட்டார சபைத் தலைவர் எம். விஜயன் நன்றி கூறினார். வட்டார சபை துணைத் தலைவர் கிறிஸ்துராஜ், பொருளர் பீட்டர் ராஜன், தச்சூர் கிளை சபை பொருளாளர் ஏ.மரியதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai