சுடச்சுட

  

  கடலில் தவறி விழுந்த மீனவரை காப்பாற்றியவர்களுக்கு பாராட்டு

  By கன்னியாகுமரி,  |   Published on : 21st October 2014 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாகுமரி அருகே கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து நடுக்கடலில் உயிருக்குப் போராடிய மீனவரைக் காப்பாற்றிய சக மீனவர்கள் 13 பேரை பங்குத்தந்தை எஸ்.நசரேன் திங்கள்கிழமை ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.

  குமரி மாவட்டம் ஆளுர் பகுதியைச் சேர்ந்தவர் விமல் (32). இவர் கடந்த சில நாள்களுக்கு முன்னர் ரெஜிஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 24 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கடலுக்குள் தவறி விழுந்தார். 4 மணி நேர போராட்டத்துக் பின்னர் சக மீனவர்கள் 13 பேர் சேர்ந்து மீனவர் விமலை காப்பாற்றினர். இதையடுத்து மீனவர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய செயலுக்காக சக மீனவர்கள் 13 பேரையும் பாராட்டி ரொக்கப் பரிசு வழங்க கன்னியாகுமரி மகிழ்ச்சி மாதா விசைப்படகு சங்கத்தினர் முடிவு செய்தனர்.

  இதற்கான விழா சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை எஸ்.நசரேன் 13 மீனவர்களையும் பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பங்குப் பேரவை துணைத்தலைவர் ஜோசப், மகிழ்ச்சி மாதா விசைப்படகு சங்கத் தலைவர் செல்வம், துணைத் தலைவர் பாஸ்கர், செயலர் ஜேசுதாஸ், துணைச் செயலர் மரியஜான், பொருளாளர் உபால்டு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai