சுடச்சுட

    

    களியக்காவிளை அருகே கிராம நிர்வாக அலுவலகத்துக்கு அரசின் இலவச வேட்டி வாங்கி வந்த முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.

    களியக்காவிளை அருகேயுள்ள கூட்டப்புளி பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதன்பிள்ளை (72). இவர் அரசின் முதியோர் உதவித் தொகை பெற்று வந்தார். இந்த நிலையில் அரசின் இலவச வேட்டி வாங்க செம்மான்விளை பகுதியில் உள்ள குளப்புறம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தாராம். இவர் வேட்டியை வாங்கி விட்டு வெளியே வந்தபோது மயங்கி கீழே விழுந்தாராம். பின்னர் சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai