சுடச்சுட

    

    சூழியல் உணர்ச்சிமிகு மண்டலத்தை எதிர்த்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    By குலசேகரம்  |   Published on : 21st October 2014 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தனியார் விளை நிலங்களை சூழியல் உணர்ச்சிமிகு மண்டலமாக மாற்றும் முயற்சியை கைவிட வலியறுத்தி குலசேகரம் வனச்சரக அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தனியார் விளை நிலங்களை சூழியல் உணர்ச்சிமிகு மண்டலம் (உஸ்ரீர் நங்ய்ள்ண்ற்ண்ஸ்ங் ழர்ய்ங்) என அறிவிக்கும் வகையிலான முதற்கட்டப் பணிகளை வனத்துறை செய்துவருவதாகக் கூறப்படுகிறது.

    இதற்காக வன எல்லையிலிருந்து குறிப்பிட்ட கி.மீ. தொலைவு வரையிலான தனியார் விளை நிலங்கள் குறித்து சர்வே செய்யும் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வனத்துறையின் இந்த நடவடிக்கையால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது. வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு மாவட்டத்தில் மலையோரப் பகுதி மக்கள் மத்தியில் எதிர்ப்பு

    கிளம்பியுள்ளது.

    இந்நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி குலசேகரம் வனச்சரக அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்திற்கு குலசேகரம் நகர காங்கிரஸ் தலைவர் எபனேசர் தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் எஸ். ஜாண்ஜேக்கப், ஜே.ஜி. பிரின்ஸ், எஸ். விஜயதாரணி ஆகியோர் பேசினர்.

    இதில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜார்ஜ். ஆற்றூர் பேரூராட்சித் தலைவர் பீனா அமிர்தராஜ், கடையல் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜார்ஜ் ஸ்டீபன், திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஐசக் அருள்தாஸ், ஜெகன்ராஜ், இடைக்கோடு பேரூராட்சித் தலைவர் ராஜா ஸ்டாலின், திருவட்டாறு வட்டார காங்கிரஸ் தலைவர் ரத்தினகுமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆஸ்கர் பிரடி, மகிளா காங்கிரஸ் தலைவர் சுசிலா, திற்பரப்பு பேரூராட்சி துணைத் தலைவர் சுரேஷ், வார்டு உறுப்பினர் ராஜப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்கநாடார், கோபகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் எம்எல்ஏக்கள் ஒன்றாக வனச்சரக அலுவலரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai