சுடச்சுட

  

  படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை

  By நாகர்கோவில்,  |   Published on : 21st October 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் கா. சண்முகசுந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10 ஆம் வகுப்பு தோல்வி மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து வரும் பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1.10.2014 முதல் 31.12.2014 வரையிலான காலத்திற்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.9.2014 தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றுகளுடன் அலுவலக வேலை நாளில் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பப்படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை 30.9.2014 தேதியில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்று இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளிகளுக்கு வருமான உச்ச வரம்பு எதுவுமில்லை. பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம், டி.சி. மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றுகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து நவம்பர் மாத இறுதிக்குள் அளிக்க வேண்டும். உதவித் தொகை பெற்று வருபவர்கள் மீண்டும் விண்ணப்பம் அளிக்க தேவையில்லை. உதவித் தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏற்கெனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் இந்த உதவித் தொகையை 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பெற வேண்டுமானால் அவர்கள் சுயஉறுதி மொழி ஆவணத்தை ஆண்டுக்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி 31.12.2014 வரையிலான காலத்திற்கு உதவித் தொகை பெறும் பயனாளிகள் தொடர்ந்து உதவித் தொகை பெறுவதற்கு சுயஉறுதி மொழி ஆவணத்தை அதற்குரிய படிவத்தில் நாகர்கோவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

  நாளது தேதிவரை வங்கியில் வரவுவைக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவேட்டையும், மாற்றுத்திறனாளியாக இருப்பின் அடையாள அட்டை ஆகியவற்றை பரிசீலனைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai