Enable Javscript for better performance
பிரமோஸ் விஞ்ஞானிக்கு பாராட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    கன்னியாகுமரி வரலாற்று, பண்பாட்டு ஆய்வு மையம் மற்றும் நாகர்கோவில் புறநகர் ரோட்டரி சங்கம் சார்பில், லால் பகதூர் சாஸ்திரி விருது பெற்ற விஞ்ஞானி அ. சிவதாணுபிள்ளைக்கு பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது.

    ரோட்டரி சங்கத் தலைவர் சுனில் அய்யப்பன் தலைமை வகித்தார். செயலர் சதிஷ்குமார் வரவேற்றார். ஆய்வு மைய பொதுச் செயலர் டாக்டர் எஸ். பத்மநாபன், விஞ்ஞானியின் சாதனைகளைக் கூறி அறிமுகம் செய்தார். ஆய்வு மையத் தலைவர் வேலப்பன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் சண்முகம், சிவதாணுபிள்ளைக்கு விருது வழங்கினார்.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன், நாகர்கோவில் டி.வி.டி. பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகம் பிள்ளை, இந்துக் கல்லூரித் தலைவர் ஆறுமுகம் பிள்ளை, ஆய்வு மையச் செயலர் துரைநீலகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாரதிய வெள்ளாளர் ஐக்கியச் சங்க மாநிலத் தலைவர் கோ. முத்துக்கருப்பன் தலைமையில் மாவட்டத் தலைவர் ஆழ்வார், செயலர்கள் சுப்பிரமணிய பிள்ளை, சங்கரன்பிள்ளை, பொருளாளர் நாகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவன்பிள்ளை, தெ.வே. பகவதிப்பெருமாள் ஆகியோர் விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai