சுடச்சுட

  

  பி.எஸ்.என்.எல்.:அக். 21, 22 தேதிகளில் சிறப்புச் சலுகைகள் செயல்படாது

  By நாகர்கோவில்,  |   Published on : 21st October 2014 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பி.எஸ்.என்.எல். அனைத்து ப்ரீபெய்டு மொபைல் திட்டங்களுக்கு உரிய குறைக்கப்பட்ட பிளான்கள் மற்றும் ஸ்பெஷல் டாரிப் வவுச்சர்கள் தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்.21, 22 ஆகிய தேதிகளில் செயல்படாது.

  இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நாகர்கோவில் தொலை தொடர்பு மாவட்டப் பொதுமேலாளர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  பி.எஸ்.என்.எல். அனைத்து ப்ரீபெய்டு மொபைல் திட்டங்களுக்கான குறைக்கப்பட்ட பிளான்கள் மற்றும் ஸ்பெஷல் டாரிப் வவுச்சர்கள் அதாவது பூஸ்டர்களானது ப்ளாக்அவுட் நாள்கள் என்ற கணக்கில் தீபாவளி தினத்தை முன்னிட்டு அக். 21, 22 ஆம் தேதிகளில் செயல்படாது.

  அதன்பின் அந்த பூஸ்டர்களானது குறிப்பிடப்பட்டுள்ள காலம் வரை தொடர்ந்து செயல்படும். இது சம்பந்தமாக ஏற்கெனவே அனைத்து ப்ரீபெய்டு மொபைல் சந்தாதாரர்களுக்கும் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

  இம்மாதம் 30ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு ரூ. 6000 க்குரிய சி-டாப் அப் மற்றும் டாப்-அப்பிற்கு 20 சதவிகிதம் அதிகரித்து ரூ. 7200 வரை கூடுதல் டாக் டைம் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai