சுடச்சுட

  

  பூதலிங்கசுவாமி கோயிலில் இன்று திருக்கல்யாண விழா

  By நாகர்கோவில்  |   Published on : 21st October 2014 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பூதப்பாண்டி அருள்மிகு சிவகாமி அம்மன் சமேத பூதலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க்கிழமை (அக். 21) நடைபெறுகிறது.

  இதையொட்டி காலை 6.30 மணிக்கு சிவகாமி அம்மன், அழகிய மணவாளப் பெருமாள் கோயிலுக்கு பல்லக்கில் எழுந்தருளல் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு பட்டும், மாலையும் பல்லக்கில் பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு பூதலிங்க சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  மாலை 5.30 மணிக்கு பெருமாள் கோயில் முன், சுவாமி, அம்மன் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவம் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிவகாமி அம்பாள் திருவீதி எழுந்தருளலும், தொடர்ந்து சீர்வரிசை தட்டுகள் ஏந்திய பக்தர்கள் புடைசூழ அழகிய மணவாளப் பெருமாள் திருமண மண்டபத்துக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது.

  அங்கு கொடிமரத்தின் முன் சிவகாமி அம்மனுக்கு அஷ்டாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. பின் மணமேடைக்கு அம்மன் எழுந்தருளலும், இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

  தொடர்ந்து இரவு 8.45 மணிக்கு பட்டினப்பிரவேச யாத்திரைக்காக சுவாமியும், அம்மனும் திருவீதி எழுந்தருளலும், 9 மணிக்கு பள்ளியறை தீபாராதனையும் தொடர்ந்து, திருக்கல்யாண விருந்தும் நடைபெறுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai