Enable Javscript for better performance
பைக் மீது அரசுப் பேருந்து மோதி ஆசிரியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல் அருகே பாலூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஆசிரியர் இறந்தார்.

    கருங்கல் பூட்டேற்றி பகுதியைச் சேர்ந்தவர் ரிஷிகேசவன் (49). இவர், திருவட்டாறில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், தனது மனைவி குழந்தைகளுடன் திருவட்டாறில் வசித்து வந்தார்.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பூட்டேற்றியில் உள்ள தன் சொந்த வீட்டுக்குச் செல்வதற்காக பைக்கில் ரிஷிகேசவன் கருங்கல்லை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பாலூர் பகுதியில் சென்றபோது, எதிரே மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ரிஷிகேசவன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, அரசுப் பேருந்து ஒட்டுநர் அலக்சாண்டரை கருங்கல் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai