சுடச்சுட

    

    முக்கடல் மலைப் பகுதியில் குளித்த இளைஞர் மாயம்

    By நாகர்கோவில்,  |   Published on : 21st October 2014 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் அருகே முக்கடல் மலைப் பகுதியில் நண்பர்களுடன் குளித்தபோது காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்ற இளைஞரை தீயணைப்பு வீரர்கள் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் தேடினர்.

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகரைச் சேர்ந்தவர் சர்மில் (26). இவர் நாகர்கோவிலில் உள்ள வாட்டர்கேன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார்.

    ஞாயிற்றுக்கிழமை சர்மில், அவரது நண்பர்கள் 9 பேருடன் முக்கடல் மலைப் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். முக்கடல் அணையில் இருந்து சுமார் 7 கி.மீ, தொலைவில் உள்ள வனப் பகுதியில் இவர்கள் நடந்து சென்றனர். அங்கு அவர்கள் சமையல் செய்து சாப்பிட்டு விட்டு மாலை நேரத்தில் அணைக்கு வரும் தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெய்த கன மழையில் அணைக்கு காட்டாற்று வெள்ளம் வந்தது.

    இதை கவனித்தவர்கள் கரை திரும்பினர். ஆனால் சர்மில் மட்டும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினார். அவர் கரை திரும்பாததால், நண்பர்கள் நாகர்கோவில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சர்மிலை தேடினர். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் திங்கள்கிழமையும் சர்மிலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சர்மில் கதி என்ன என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai