சுடச்சுட

    

    வடகிழக்குப் பருவ மழை: நுகர்வோர் குறை தீர்க்க அவசர தொலைபேசி எண்கள்

    By நாகர்கோவில்,  |   Published on : 21st October 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பொது விநியோகத் திட்டத்துக்கு இடர்பாடு ஏற்படும் நேரங்களில் அவசர தேவைகளுக்கு கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    வடகிழக்குப் பருவமழை காலத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுகர்வோர் தொடர்பாக கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாழ்வான இடங்களிலுள்ள நியாயவிலை கடைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பண்டங்கள் போதிய அளவில் சேகரித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவு தானியங்களை கொண்டு செல்லும் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டால் மாற்றுத்தடங்கள் மூலமாக உணவு தானியங்கள் கொண்டு செல்ல வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

    வடகிழக்குப் பருவமழை காலத்தின் போது கெட்டுப்போன உணவு தானியங்கள் ஏதேனும் இருப்பில் இருந்தால் அவற்றை அழிக்க வேண்டும். கடற்கரையோர பகுதிகளில் மற்றும் வெள்ள அபாயம் உள்ள இடங்களில் தேவையான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் உரிய இடங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    அத்தியாவசியப் பண்டங்களை அவசரமாக கொண்டு செல்ல உரிய தனியார் வாகன உரிமையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உரிய காலத்தில் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையுடன் தொலைபேசி எண் 04652-279090 மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு தொலைபேசி எண் 1077 ஆகிய எண்கள் மற்றும் நாகர்கோவில் கூட்டுறவு இணைப்பதிவாளர் தொலைபேசி எண் 04652-278257 மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலக தொலைபேசி எண் 04652-261214 ஆகிய சேவைகள் 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai