சுடச்சுட

    

    விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடரும் பைக் திருட்டு

    By களியக்காவிளை,  |   Published on : 21st October 2014 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழித்துறையில் உள்ள விளங்கோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பைக் திருட்டை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    குழித்துறையில் உள்ள வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம், கருவூலம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் மற்றும் கிளைச் சிறை உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமானோர் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.

    இப்பகுதியில் பைக்குகளை நிறுத்திவிட்டு அலுவலகங்களுக்குள் சென்று வருவதற்குள் பைக்குகள் திருடு போவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10}க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடு போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நபர்கள் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தும், போலீஸார் இப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடாத நிலை உள்ளது. இந்த நிலையில் தேமுதிக தக்கலை ஒன்றியச் செயலர் செல்வின், இரு நாள்களுக்கு முன் வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்குள் தனது பைக்கை நிறுத்திவிட்டு, வட்ட வழங்கல் அலுவலகம் சென்று விட்டு சிறிது நேரத்தில் திரும்பிய போது அவரது பைக் திருடு போனது.

    இது குறித்து செல்வின் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். எனவே காவல்துறையினர் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai