சுடச்சுட

  

  24 இல் தெட்சணத்து துவாரகாபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடக்கம்

  By கன்னியாகுமரி,  |   Published on : 21st October 2014 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாகுமரி அருகேயுள்ள அய்யா வைகுண்டர்சாமி தெட்சணத்து துவாரகாபதியில் 17 நாள்கள் திருஏடு வாசிப்பு திருவிழா அக் 24 இல் தொடங்குகிறது.

  இப்பதியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருஏடு வாசிப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இத்திருவிழா இம்மாதம் 24 இல் தொடங்கி நவம்பர் 9 ஆம் தேதி வரை 17 நாள்கள் நடைபெறுகிறது. விழா தொடக்க நாளன்று மாலை 6 மணிக்கு சிவதவசி, முத்துநாயகம் ஆகியோர் பங்கேற்று திருஏடு வாசித்து விளக்கவுரையாற்றுகின்றனர். நவ. 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பௌர்ணமி தவமும், 7 ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிப்பும், இரவு 9 மணிக்கு அன்னதர்மமும் நடைபெறும்.

  9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அய்யாவின் பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறும். இரவு 8 மணிக்கு வாகன பவனி, இரவு 9 மணிக்கு அன்னதர்மம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai