சுடச்சுட

    

    திற்பரப்பு பேரூராட்சி கோட்டூர் கோணம் பகுதியில் குளத்து புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இரு குடிசைகள் மற்றும் அங்கு நடவு செய்திருந்த வாழைகளை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

    கோட்டூர்கோணம் பிலாங்காலை விலை குளத்தின் கரையில் பிரான்சீஸ், சற்குணம் ஆகியோர் குடிசை அமைத்து வசித்து வந்தனர். இவர்கள் தங்களின் வீடுகளில் அருகில் 50 க்கும் மேற்பட்ட வாழைகளும் நடவு செய்திருந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை திற்பரப்பு பேரூராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடிசைகளையும், அங்கிருந்த வாழைகளையும் அகற்றினர். இதுகுறித்து அப்பகுதி பேரூராட்சி உறுப்பினர் யோபு கூறுகையில், ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai