சுடச்சுட

  

  கண்புரை நோயாளிகளுக்கு கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சை முகாம் இம்மாதம் 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் இம்மாதம் 24 ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை திருவரம்பு அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 25 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மருங்கூர் பேரூராட்சிக்கு உள்பட்ட ராஜாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும்,  27 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தூத்தூர் மறைமாவட்ட அலுவலகத்திலும், 28 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சுங்கான்கடை அரசு தொடக்கப் பள்ளியிலும், 29 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மணக்குடி அரசு துணை சுகாதார நிலையத்திலும் இம்முகாம் நடைபெறுகிறது.

  30 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருவிதாங்கோடு அரசு நடுநிலைப் பள்ளியிலும், 31 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருப்பதிசாரம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் இம்முகாம் நடைபெறும்.

  இத்திட்டத்தில் பயன்பெறும் அனைத்து கண்புரை நோயாளிகளுக்கும் இலவசமாக கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai