சுடச்சுட

    

    எல்.ஐ.சி.யின் சமூக பாதுகாப்பு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.

    விழாவுக்கு, முதுநிலை கோட்ட மேலாளர் உலகநாதன் தலைமை வகித்தார். குழு காப்பீட்டுத் துறை கிளை மேலாளர் ராம்நாத் வரவேற்றார். உதவி நிர்வாக அதிகாரி செந்தில்குமார் குழு காப்பீட்டுத் திட்டம் குறித்துப் பேசினார். விழாவில், பாலிசிதாரர்களின் வாரிசுதாரர்களுக்கு உரிமமும், மாணவர், மாணவிகளுக்கு புத்தகங்களும் வழங்கப்பட்டன. ஏழை மாணவர்களின் படிப்புக்காக மகாசேமம் அறக்கட்டளை என்ற அமைப்புக்கு ரூ. 35 லட்சத்துக்கான காசோலை பீமயோஜானா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டது. கடந்த நிதியாண்டில், 359 பேருக்கு இறப்பு உரிமம் தொகையாக ரூ. 1.17 கோடியும், 29,766 பேருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 1.78 கோடி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அலுவலர் குமார் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai