சுடச்சுட

    

    கருங்கல் பகுதியில் கடைகளை அடைக்க அதிமுகவினர் வலியுறுத்தியதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கருங்கல் பேருந்து நிலைய சந்திப்பு, ராஜீவ்காந்தி சிலை சந்திப்பு, கூனாலுமூடு பகுதிகளில் உள்ள கடைகளை அடைக்குமாறு  50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரளாக வந்து வலியுறுத்தினர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வியாபாரிகளுக்கும், கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

    இதையடுத்து போலீஸார் மற்றும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த அதிரடிப்படை போலீஸார் வந்து கட்சி நிர்வாகிகளை அங்கிருந்து விரட்டினர். இப் பகுதியில் கடைகள் அனைத்தும் சனிக்கிழமை திறந்திருந்தன. கருங்கல் வழி இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதையடுத்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லவேண்டிய பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai