Enable Javscript for better performance
கருங்கல்லில் கூடுதல் ஏ.டி.எம். மையம் அமைக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல் பகுதியில் கூடுதலாக ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும் என கருங்கல் தொழில் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கருங்கல்லில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் தலைவர் ஜார்ஜ் தலைமை வகித்தார். செயலர் தாம்சன் முன்னிலை வகித்தார்.

    கருங்கல்-செல்லங்கோணம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். ஏ.டி.எம். மையத்தை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai