சுடச்சுட

    

    குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானிகளாக 56 மாணவர்கள் தேர்வு

    By DN  |   Published on : 22nd October 2014 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி அறிவியல் பேரவை சார்பில் ஆண்டுதோறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இளம் விஞ்ஞானிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு சீரான சூழியல் என்னும் பொருளில் ஆய்வு செய்ய குமரி மாவட்ட பள்ளி மாணவர்களிடையே பலகட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு, இளம் விஞ்ஞானிகளாக 56 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இளம் விஞ்ஞானிகள் தேர்வு பட்டியல் வெளியிடும் விழா மார்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் நடைபெற்றது. குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் தலைமை வகித்தார். அமைப்பின் நிர்வாகிகள் கேப்டன் பென்னட்சிங், ஜான்சன், சதீஷ்குமார், ஜெயகுமாரி, ஜெயசெல்வகுமாரி, எட்வின்சாம், பாலகிருஷ்ணன், சஜீவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இளம் விஞ்ஞானிகள் தேர்வு பட்டியலை மேல்புறம் அருகேயுள்ள மூடோடு சிக்மா ஆர்க்கிடெக்சர் கல்லூரி தலைவர் ஜேம்ஸ் வில்சன் வெளியிட, பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி வேலையன் பெற்றுக்கொண்டார்.

    இதில், நிலம் மற்றும் காடுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்ய திருவட்டாறு எக்ஸல் குளோபல் பள்ளி மாணவி ஆர்.எஸ். ரக்ஷô, ஆற்றூர் என்விகேஎஸ் பள்ளி மாணவி ஏ.எஸ். இந்துஜா, தோட்டவாரம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவி ஆர்.எம். அனிஷா, மணலிக்கரை மரிய கொரட்டி மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.ஜி. வினோஜ், கூட்டுமங்லம் விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் நிஷாந்த், நாகர்கோவில் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவி எம். சபரினா லைனைட்டி பெர்னாண்டோ, மார்த்தாண்டம் இந்து வித்யாலயா பள்ளி மாணவர் நிவேந்த் சங்கர், நாகர்கோவில் ஆதர்ஷ் வித்யா கேந்திரா பள்ளி மாணவர் பிரதீப் நாராயணன், கருங்கல்  இந்து வித்யாலயா பள்ளி மாணவர் பி. ஆர். ராகுல் நீர் குறித்து ஆய்வு செய்ய மஞ்சாலுமூடு அருணோதயா மெட்ரிக் பள்ளி மாணவர் டி. விஷால், சிதறால் என்.எம். வித்யா கேந்திரா பள்ளி மாணவர் வி.எஸ். விஜயராஜ், களியல் புனித மேரி மேல்நிலைப் பள்ளி மாணவி லினா சஜூ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    வேளாண்மை என்னும் பொருளில் ஆய்வு செய்ய மைலோடு விக்டரி மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.ஜெ. ஷிபி, கருங்கல் இந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி கே.ஆர். அருணா, கன்னியாகுமரி அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவர் கெüசன் காளிதாஸ், சூழால் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிலா, காப்புக்காடு புனித அந்தோனியார் உயர்நிலைப் பள்ளி மணவி ஆர்.ஜெ. ஜெனிஷா, அண்டுகோடு பி.பி.எம். மேல்நிலைப் பள்ளி மாணவர் கே.கே. பிரபின்குமார் ஆகியோரும், எரிசக்தி என்னும் பொருளில் ஆய்வு செய்ய நாகர்கோவில் ஆதர்ஷ் வித்யா கேந்திரா மாணவி என். ஸ்ரீநிதி, கூட்டுமங்கலம் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மாணவி காவ்யாஸ்ரீ, குலசேகரம் எஸ்.ஆர்.பி.வி மெட்ரிக் பள்ளி மாணவர் ஸ்ரீராம் ஆகியோரும், தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்ய மண்டைக்காடு ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஷ்யாம்சாகர், குலசேகரம் புனித உருசுலாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஷாமினி, சிதறால் என்.எம். வித்யா கேந்திரா மாணவர் வி. நவீன்ஜித் உள்பட மொத்தம் 56 மாணவர்கள் இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

    ஆய்வின்போது வழிகாட்டிகளாக செயல்பட மகேந்திரகிரி விண்வெளி மைய விஞ்ஞானிகள், பேரவை நிர்வாகிகள் உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.

    மேலும், நவம்பர் 8, 9 ஆம் தேதிகளில் அறிவியல் தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம் தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் நடத்துவது என பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai