சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக 4 பேர் கைது

    By DN  |   Published on : 22nd October 2014 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜாக்கமங்கலம், தக்கலை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    ராஜாக்கமங்கலம் அருகே ஆறுதெங்கன்விளையில் ஒரு வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் நீண்டகரை பி கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் அந்த வீட்டில் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு முத்துகிருஷ்ணன் (65), மாரி (60) ஆகியோர் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து கொண்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கிருந்த 5 மூட்டை பட்டாசுகளை அலுவலர்கள் பறிமுதல் செய்து, இருவரையும் பிடித்து ராஜாக்கமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைபோல தக்கலை அருகே உள்ள கோட்டவிளை பகுதியிலும் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் உதவி-ஆய்வாளர் சுபாஷ் மற்றும் போலீஸார் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு ஒரு வீட்டில் 2 பெண்கள் ஓலை பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

    இவர்களை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்த 95 ஓலை பட்டாசுகள், கரி மருந்து, சல்பர் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் கோட்டவிளையைச் சேர்ந்த செல்லப்பன் மனைவி ராணி (41), சங்கரன் மனைவி செல்லம்மாள் (70) என்பது தெரியவந்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai