சுடச்சுட

  

  குமரி மாவட்டம், சுவாமியார்மடம் பகுதியில் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழையில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றதால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை என்.எச். 47 சீரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஒருபகுதியாக சுவாமியார்மடம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றது. இப்பகுதியில் காலைமுதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும் சாலைப் பணிகளும் நிறுத்தப்படாமல் நடைபெற்று வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்தனர்.

  இதில் பொதுமக்கள் சிலர் பணி நடைபெற்ற இடத்தில் நின்று கொண்டிருந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் சாலைப்பணிகள் குறித்து  புகார் கூறிய போது, அந்த அதிகாரிக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் இருதரப்பினரையும் சமரசப்படுத்தினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai