சுடச்சுட

  

  சுசீந்திரம் அருகே மரத்தில் கட்டிவைத்து பெயின்டர் அடித்துக் கொலை

  By DN  |   Published on : 22nd October 2014 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுசீந்திரம் அருகே மரத்தில் கட்டி வைத்து பெயின்டரை கொடூரமான முறையில் கொலை செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  சுசீந்திரம் அருகே மயிலாடி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் மனோகுமார் (38). பெயின்டர். இவரது மனைவி சத்யபாமா. 2 குழந்தைகள் உள்ளனர்.

  மனோகுமார் அடிக்கடி வெளியூர் வேலைக்குச் சென்று வந்தார். இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு, சத்யபாமா கணவருடன் கோபித்துக்கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு, சொத்தவிளையில் உள்ள தன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

  திங்கள்கிழமை மனைவியை சமரசம் செய்து வீட்டுக்கு அழைத்து வருவதற்காக சொத்தவிளைக்கு சென்ற மனோகுமார், இரவு வரை வீடு திரும்பவில்லையாம்.

  இந்நிலையில், அவர் சொத்தவிளையில் உள்ள ஒரு தென்னந்தோப்பில், மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில், தலையில் ரத்தக் காயத்துடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

  இதுகுறித்து சுசீந்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai