சுடச்சுட

    

    திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இக்கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் ஐப்பசி திருவிழாவையொட்டி புதன்கிழமை அதிகாலையில் நடைதிறக்கப்படுகிறது. பின்னர் நிர்மால்ய தரிசனம், ஹரிராம கீர்த்தனம், அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.  காலை 9 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. மாலையில் ராமாயண பாராயணம், சுவாமி எழுந்தருளல்  உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    விழாவின் 9 ஆவது நாளான அக். 30 ஆம் தேதி பள்ளி வேட்டை நிகழ்ச்சியும் நிறைவு நாளான அக். 31 ஆம் தேதி ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai