Enable Javscript for better performance
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா

    By DN  |   Published on : 22nd October 2014 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இக்கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் ஐப்பசி திருவிழாவையொட்டி புதன்கிழமை அதிகாலையில் நடைதிறக்கப்படுகிறது. பின்னர் நிர்மால்ய தரிசனம், ஹரிராம கீர்த்தனம், அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.  காலை 9 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. மாலையில் ராமாயண பாராயணம், சுவாமி எழுந்தருளல்  உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    விழாவின் 9 ஆவது நாளான அக். 30 ஆம் தேதி பள்ளி வேட்டை நிகழ்ச்சியும் நிறைவு நாளான அக். 31 ஆம் தேதி ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai