சுடச்சுட

    

    உலக உணவு தினத்தையொட்டி, அக்கறை அறக்கட்டளை சார்பில், கோவளம் மீனவர் கிராமத்தில் மரக்கன்று நடும் விழா  நடைபெற்றது.

    சுத்தமான உணவுத் தேவைக்கு, சுற்றுப்புறச் சூழலை மாசுபடாமல் பாதுகாக்கவேண்டியது அவசியம் என்பது உலக உணவு தினத்தில்  வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில், அக்கறை அறக்கட்டளை சார்பில், கன்னியாகுமரியை அடுத்த கோவளம் மீனவர் கிராமத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. கோவளம் பங்குத்தந்தை சேவியர் லாரன்ஸ் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டார். இதில், ஊர்த்தலைவர் பென்னி, செயலர் புஷ்பராஜ், அக்கறை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சரவணபவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai