சுடச்சுட

  

  கருங்கல் அருகே உள்ள ராமன்துறை புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளியில்  பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

  ராமன்துறை சாந்ததன் பெண்கள் இயக்கம் மற்றும் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இம் முகாமிற்கு ராமன்துறை பங்கு அருள்பணியாளர் ஆன்டோ வினோ தலைமை வகித்தார். பெண்கள் இயக்கத் தலைவர் சரிதா முன்னிலை வகித்தார். கிள்ளியூர் எம்.எல்.ஏ. ஜாண்ஜேக்கப் முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

  முகாமில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்பு உள்ளிட்ட நோய்களுக்கு ரத்தம் பரிசோதித்து நோய்கண்டறியப்பட்டு சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளித்தனர். இதில் கிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அங்கித்ஷா, ருதின் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில், குமரி மாவட்ட மீனவப்பேரவைத் தலைவர் ஜோர்தான், இனயம் புத்தன்துறை ஊராட்சி உறுப்பினர்கள், சூசைசெல்வம், சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 300 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைபெற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai