சுடச்சுட

    

    வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்களை சேர்க்க தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்

    By DN  |   Published on : 22nd October 2014 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்களைச் சேர்க்க அதிமுகவினர் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என குமரி கிழக்கு மாவட்டச் செயலர் என்.தளவாய்சுந்தரம் கேட்டுக் கொண்டார்.

    நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் என். தளவாய்சுந்தரம் தலைமை வகித்து பேசியது: குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் அக்டோபர் 26 மற்றும் நவம்பர் 2ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் 1.1.2015 அன்று 18 வயது பூர்த்தி அடைந்த நபர்களை கண்டறிந்து அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அனைவரும் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    கூட்டத்தில், நாஞ்சில் ஏ.முருகேசன் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் சதாசிவம், சிறுபான்மை பிரிவுத் தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், அணிச் செயலர்கள் சேவியர் மனோகரன், டாரதி சாம்சன், ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணகுமார், சகாயராஜ், நகரச் செயலர் சந்திரன், ஒன்றியச் செயலர்கள் கே.சி.யூ.மணி, தம்பிதங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் தளவாய்சுந்தரம் தலைமையில் தோவாளை முருகன் கோயிலில் அதிமுகவினர் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai