சுடச்சுட

  

  விபத்தின்றி தீபாவளியைக் கொண்டாட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

  By DN  |   Published on : 22nd October 2014 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விபத்தின்றி தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்போது பட்டாசு வெடிப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம். மிகவும் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது விபத்தை தடுக்க உதவும். தீப்பற்ற வைத்த பட்டாசுகளின் அருகில் செல்வதோ, பாட்டில் மற்றும் டின்களில் வைத்து வெடிப்பதோ ஆபத்து.

  பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை வெடிக்கும்போது தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவசர சிகிச்சை அளிக்க கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

  பட்டாசுகளை கையில் வைத்து வெடிக்கக்கூடாது. பச்சிளங்குழந்தைகள் வீட்டில் இருந்தால், பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும். மேலும் அதிக சப்தமாக வெடிக்கும் வெடிகளை தவிர்க்க வேண்டும். ஆஸ்துமா, தும்மல் அலர்ஜி உள்ளவர்கள் பட்டாசு மத்தாப்பு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai