Enable Javscript for better performance
வெள்ளிமலை கோயிலில் அக். 24இல் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளிமலை கோயிலில் அக். 24இல் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்

    By DN  |   Published on : 22nd October 2014 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா அக். 24ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

    கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, அருள்மிகு பாலசுப்பிரமணிசுவாமி திருக்கோயிலில் வரும் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு கணபதிஹோமமும், 5.30 மணிக்கு வெள்ளிமலை இந்து தர்ம வித்யாபீடம் சுவாமி கருணானந்தஜி மகராஜ் தலைமையில் கிரிவலம் நடைபெறுகிறது. 6 மணிக்கு சுவாமிக்கு காப்புகட்டு வைபவம் நடைபெறுகிறது.

    6.30 மணிக்கு நடைபெறும் அகண்டநாப ஜெபத்தை வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீடத் தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் மற்றும் சுவாமி கருணானந்தஜி மகராஜ் ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர். காலை 11 மணிக்கு அபிஷேகமும், பகல் 1 மணிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது.

    கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஒவ்வொருநாளும் கிரிவலம், பஜனை, கந்தபுராணம் விரிவுரை, கலைநிகழ்ச்சிகள் நாட்டியம், பக்தி இன்னிசை பரத நாட்டியம் ஆகியன நடைபெறுகிறது.

    சூரசம்ஹாரம்:   புதன்கிழமை (அக் .29) மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் சுவாமி கோயில் மலையைச் சுற்றி வந்த பின்னர் 6.15 மணிக்கு கோயில் அடிவார முகப்பில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    6.30 மணிக்கு அபிஷேகமும், இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகமும், 8 மணிக்கு தீபாராதனையும், 8.30 மணிக்கு சுவாமி மயில் வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை  ஆலய முன்னேற்ற சங்க கௌரவத்தலைவர் ப.குற்றாலம்பிள்ளை, தலைவர் எஸ்.ராஜரத்தினம், பொதுச்செயலர் சி. ராஜகோபால், பொருளர் மோகனன்தம்பி, உதவித்தலைவர் குமரேசன், செயலர் ராமச்சந்திரன், சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் சிவகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai