சுடச்சுட

    

    தீபாவளிக்கு ஊருக்கு வந்தவர்கள் குவிந்ததால், ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க வியாழக்கிழமை நாகர்கோவிலில் உள்ள முகாம்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    குமரி மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்காமல் விடுபட்டவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் 15 இடங்களில் இப்பணி நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் நகரப் பகுதி மக்களுக்கு டதி மகளிர் பள்ளி மற்றும் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார மையத்தில்

    புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    வெளியூரில் இருப்பவர்கள் தீபாவளியை முன்னிட்டு ஊருக்கு வந்ததால், ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க இந்த இரண்டு முகாம்களில் வியாழக்கிழமை குவிந்தனர்.

    புகைப்படம் எடுக்கும் பணிக்கு குறைந்த ஊழியர்கள் இருந்ததால் இந்த மையங்கள் முன் பல மணிநேரம் காத்திருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த மையங்களில்

    கூடுதலாக ஊழியர்களை நியமித்தால் வெளியூரில் இருந்து வந்தவர்கள் புகைப்படம் எடுத்துச் செல்ல வாய்ப்பாக இருக்கும் என்கின்றனர் பொதுமக்கள்.

    ஏமாற்றம்:÷தும்பகோட்டில் ஆதார் அட்டை முகாமில் புகைப்படம் எடுக்க வந்த மலைவாழ் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    தும்பகோடு கிராம அலுவலகத்தில் வியாழக்கிழமை பொன்மனை பேரூராட்சி 1 ஆம் வார்டு பகுதி மக்களுக்கு புகைப்படம் எடுக்கப்படும் என

    அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து புறாவிளை, ஆலம்பாறை, வலியமலை, வில்லுசாரி மலை, படுபாறை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இருந்து குழந்தைகளுடன் ஏராளமான மக்கள் தும்பகோடு

    கிராம அலுவலகம் வந்தனர்.

    ஆனால் முகாமில் போதிய பணியாளர்கள் இல்லாத நிலை மற்றும் கணினிகள் இயங்காத நிலை காரணமாக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை புகைப்படம் எடுக்கப்படவில்லை. இதையடுத்து வந்தவர்களில் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai