Enable Javscript for better performance
ஆற்றூர் பொறியியல் கல்லூரியில் இன்று அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    ஆற்றூர் பொறியியல் கல்லூரியில் இன்று அறிவியல் கண்காட்சி

    By DN  |   Published on : 24th October 2014 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் தென்மண்டல பள்ளிகளுக்கிடையேயான அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட முப்பெரும் போட்டிகள்

    வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.

    அறிவியல் கண்காட்சி, விளையாட்டுப் போட்டி, கலைப் போட்டி என நடைபெறும் இப்போட்டிகளை மாவட்ட கல்வி அலுவலர் ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைக்கிறார்.

    கல்லூரித் தலைவர் ஜி. ரசல்ராஜ் தலைமை வகிக்கிறார். கல்லூரி முதல்வர் ஒய்.சுஜர், இயக்குநர் ஹரிஹரசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குழித்துறை

    மாவட்ட கல்வி அலுவலர் ஜே. ஜேசுரத்தினம், தக்கலை மாவட்ட கல்வி அலுவலர் டி. ஜேக்கப் அருள் மாணிக்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.

    சனிக்கிழமை நடைபெறும் நிறைவு விழாவில் மகேந்திரகிரி இஸ்ரோ இயக்குநர் டி. கார்த்திகேசன் பங்கேற்று போட்டிகளில் வெல்லும் பள்ளிகள் மற்றும் மாணவர்,

    மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசுகிறார்.

    ஏற்பாடுகளை கல்லூரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் பிரிஜ்லால் ரூபன் தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai