சுடச்சுட

    

    இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம்

    By DN  |   Published on : 24th October 2014 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இணையதளம் வழியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தம் மேற்கொள்ள மனுக்களை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்பேரில் இப்போது குமரி மாவட்டத்தில் சிறப்பு சுருக்க முறை

    திருத்தம் 15.10.2014 முதல் நடைபெற்று வருகிறது. 1.1.2015 இல் 18 வயது நிறைவடைந்த மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி,

    வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் மேற்கொள்ள மனுக்களை நேரடியாக வழங்கலாம்.

    மாவட்டத்தில் பொதுச்சேவை மையங்களாக இயங்கும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களிலும் கீழ்க்கண்ட இணையதள முகவரி வழியாக படிவங்கள்

    6,7,8,8ஏ ஆகியவற்றை கீழ்கண்டவாறு தொகை செலுத்தி பதிவேற்றம் செய்து கொள்ளலாம். 

    மேலும், மாவட்ட ஆட்சியரால் கோரிக்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட தனியார் இணையதள மையங்கள் வழியாகவும் மனுக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 10.11.2014 இல் நிறைவடைகிறது.

    இணையதள முகவரி: http:www.election.tn.gov.inregistration. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளித்தல் ரூ.10. வாக்காளர்

    பட்டியலில் பெயர் நீக்க மனு அளித்தல் ரூ.10.

    வாக்காளர் பட்டியலில் பெயர்,இதர விவரங்கள் திருத்த மேற்கொள்ள மனு அளித்தல் ரூ.10. வாக்காளர் பட்டியலில் ஒரே தொகுதிக்குள் பெயர் மாற்றம் செய்ய மனு அளித்தல்

    ரூ.10, வாக்காளர் பட்டியல் பிரதி எடுக்க ஒரு பக்கத்திற்கு ரூ.3.

    வாக்காளர் பட்டியலில் பெயர், வாக்குச்சாவடியின் பெயர், மனு மற்றும் புகாரின் நிலை ரூ.2, தேடுதல் முடிவில் பிரதி எடுக்க ஒரு பக்கத்திற்கு ரூ.3, புகார் பதிவு செய்தல்

    ரூ.10 என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai