சுடச்சுட

  

  அனைவருக்கும் வங்கிச் சேவை திட்ட முகாம் இரணியலில் சனிக்கிழமை (அக்.25) நடைபெறுகிறது.

  இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ். விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "மக்கள்} நிதி' திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்

  வகையில் இம்மாதம் 25 ஆம் தேதி இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடத்தப்பட உள்ளது.

  இம்முகாம் காலை 8 மணிக்கு தொடங்கும். மாவட்ட முன்னோடி வங்கியின் தலைமையில் தக்கலை, குருந்தன்கோடு, குளச்சல், பத்மநாபபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள

  அனைத்து வங்கிகளும் முகாமில் பங்கேற்கின்றன.

  இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள விபத்து காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் அனைத்தும் கிடைக்கும்.

  26.1.2015-க்கு முன் கணக்கு தொடங்குபவர்களுக்கு அதிகப்படி காப்பீட்டுத்தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு இல்லாத

  குடும்பத்தினர் இம்முகாமில் கலந்து கொண்டு வங்கி கணக்கை தொடங்கலாம்.

  வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அடையாள அட்டை போன்ற நிலையான முகவரிக்கான ஏதேனும் அடையாள அட்டையுடன்

  இம்முகாமில் பங்கேற்கலாம் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai