Enable Javscript for better performance
குமரி முருகன்குன்றத்தில் கந்தசஷ்டி விழா இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    குமரி முருகன்குன்றத்தில் கந்தசஷ்டி விழா இன்று தொடக்கம்

    By DN  |   Published on : 24th October 2014 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி முருகன்குன்றத்தில் 7 நாள் கந்த சஷ்டி திருவிழா வெள்ளிக்கிழமை (அக்.24) தொடங்குகிறது.

    இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு கலசபூஜை, காலை 7.30 மணிக்கு அபிஷேகம், காலை 8.30 மணிக்கு சிறப்பு வழிபாடு, காலை 9

    மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பம், காலை 10 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை, காலை 10.45 மணிக்கு சிறப்பு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு சிறப்பு வழிபாடு,

    பகல் 12 மணிக்கு வெள்ளி அங்கி சாற்றி சிறப்பு வழிபாடு, மாலை 3.30 மணிக்கு திருவிளக்கு சகஸ்ர நாம வழிபாடு, மாலை 5.30 மணிக்கு சமயஉரை, மாலை 6.30 மணிக்கு

    பஜனை, இரவு 7.30 மணிக்கு சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெறும்.

    இம்மாதம் 30 ஆம் தேதி காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7 மணிக்கு கலசபூஜை, காலை 9 மணிக்கு சீர்வரிசை எடுத்து வருதல், காலை 10 மணிக்கு

    திருக்கல்யாணம், காலை 11 மணிக்கு திருக்கல்யாண பட்டணப்பிரவேசம், பகல் 12 மணிக்கு மங்கள தீபாராதனை, பகல் 12.30 மணிக்கு திருக்கல்யாண விருந்து, மாலை 6.30

    மணிக்கு சிறப்பு வழிபாடு ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai