சுடச்சுட

  

  கொல்லங்கோடு அருகே வேனில் கேரளத்துக்கு கடத்திச் செல்லவிருந்த 825 லிட்டர் மண்ணெண்ணெயை போலீஸார் வியாழக்கிழமை  பறிமுதல்

  செய்தனர். வேன் ஓட்டுநர், கிளீனர் கைது செய்யப்பட்டனர்.

  கொல்லங்கோடு காவல் நிலைய பைக் ரோந்துப் பிரிவு தலைமைக் காவலர் எட்வின்டேவிட், இளைஞர் காவல்படை காவலர் சஜீர் ஆகியோர் கொல்லங்கோடு அருகே

  இளம்பாலமுக்கு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கேரளம் நோக்கி வேகமாகச் சென்ற வேனை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

  சோதனையின்போது, 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 25 கேன்களில் மொத்தம் 825 லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச்

  சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

  இந்த மண்ணெண்ணெய் மீனவர்களின் விசைப்படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் என்பதும் தெரிந்தது. இதையடுத்து மண்ணெண்ணெயை

  போலீஸார் பறிமுதல் செய்தனர்.

  இதுதொடர்பாக வேன் ஓட்டுநரான காக்கவிளை பகுதியைச் சேர்ந்த தோமஸ் மகன் வினு (34), கிளீனரான கேரள மாநிலம் உச்சக்கடை பகுதியைச் சேர்ந்த சாகுல்ஹமீது

  மகன் ஆலின் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

   பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai