திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா தொடக்கம்
By DN | Published on : 24th October 2014 01:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஐப்பசி மற்றும் பங்குனித் திருவிழாக்கள் என இருபெரும் திருவிழாக்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.
10 நாள்கள் நடைபெறும் ஐப்பசி திருவிழாவையொட்டி புதன்கிழமை காலையில் கொடியேற்றப்பட்டது.
கோயில் தந்திரி சங்கரநாராயணரு கொடியை ஏற்றிவைத்தார். முன்னதாக கொடி மரத்தின் சுவட்டில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கோயில் மேலாளர்
மோகன்குமார், பக்தர் சங்க நிர்வாகிகள் சி. அனந்தகிருஷ்ணன், எம். ஐயப்பன், டாக்டர் சந்திரமோகன் மற்றும் அறங்காவல் குழு உறுப்பினர்கள் மற்றும் திரளான பக்தர்கள்
பங்கேற்றனர். இம்மாதம் 30 ஆம் தேதி பள்ளி வேட்டை நிகழ்ச்சியும், நிறைவு நாளான அக்.31 ஆம் தேதி ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.