சுடச்சுட

    

    திருவிதாங்கோடு ஆலயத்தில் நோயாளிகளுக்கு சிறப்பு பிரார்த்தனை

    By DN  |   Published on : 24th October 2014 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முளகுமூடு மறைவட்ட நல்வாழ்வு பணிக்குழு மற்றும் மறை வட்ட அருள்பணிப் பேரவை சார்பில் நோயாளிகளுக்கான ஆற்றுப்படுத்தலும், சிறப்பு இறை

    வேண்டலும் திருவிதாங்கோடு புனித பெரியநாயகி அன்னை திருத்தலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஹிலாரி தலைமை வகித்தார். முளகுமூடு வட்டார குருகுல முதல்வர் சகாயதாசு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தார். விழாவில் தீபாவளிப்

    பண்டிகையை முன்னிட்டு வட்டார அருள்பணிப் பேரவை, வட்டார நல்வாழ்வு பணிக்குழு, வட்டார பணிக்குழுக்கள், திருவிதாங்கோடு பங்குப்பேரவை, வட்டார

    அருள்பணியாளர்கள், நோயாளிகள், விழாக் குழுவினர் சார்பில் ஒளியேற்றும் வழிபாடு நடைபெற்றது.

    இதில் திருவிதாங்கோடு பங்கு அருள்பணியாளர் செபாஸ்டின், நல்வாழ்வு பணிக்குழு இயக்குநர் ஆண்ட்ரூஸ் மற்றும் துண்டத்துவிளை அருள்பணியாளர் பீட்டர்,

    அருள்பணியாளர்கள் பபியான்ஸ், ஜெயபிரகாஷ் மற்றும் நல்வாழ்வு பணிக்குழுத் தலைவர் ம.சூசைமரியான், வட்டார நிர்வாகிகள் டென்னிஸ், ஜஸ்டஸ் ரோக் ஆகியோர்

    பேசினர்.

    இதில், முளகுமூடு மறைவட்டாரத்திலுள்ள 110 தேவாலயங்களிலிருந்தும் ஏராளமான நோயாளிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், அம்சி அருள்பணியாளர் லிங்சன் நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலியையும், நோயாளிகளுக்கு திருஎண்ணெய் பூசும் வழிபாட்டையும் வழிநடத்தினார்.

    பெரியநாயகி திருத்தலம் சார்பில் அனைவருக்கும் விருந்தும் வழங்கப்பட்டது.

    அனைத்து வசதிகளைக் கொண்டதாக அரசு மருத்துவமனைகளை மாற்ற வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடை செய்ய

    வேண்டும்.

    டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வதையும் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    அருள்ஜோசப் ஜேம்ஸ் வரவேற்றார். முளகுமூடு வட்டார நல்வாழ்வு பணிக்குழுச் செயலர் மேரி விஜயநிர்மலா நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai