சுடச்சுட

  

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் புதன்கிழமை கேரளம் மற்றும் ஆயிரக்கணக்கான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

  நாடெங்கிலும் தீபாவளிப் பண்டிகை புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும்

  கேரளத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்தனர்.

  திரிவேணி சங்கமம், காந்தி மண்டப சாலை, சன்னிதி தெரு, சூரிய அஸ்தமன பூங்கா, பேரூராட்சிப் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

  விவேகானந்தபுரம் தொடங்கி காவல் நிலைய ரவுண்டானா வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

  சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி கடற்கரைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai