Enable Javscript for better performance
பெயிண்டர் கொலை வழக்கு: மனைவி உள்ளிட்ட மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சுசீந்திரம் அருகே பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி உள்ளிட்ட மூவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    சுசீந்திரம் அருகே மயிலாடி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பெயிண்டர் மனோகுமார் (38). இவரது மனைவி ஜெயசந்திரபாமா. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    தம்பதி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், ஜெயசந்திரபாமா கோபித்துக் கொண்டு சொத்தவிளையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கடந்த வாரம் சென்றார். இந்நிலையில்

    இம்மாதம் 20 ஆம் தேதி மனைவியை அழைத்து வருவதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் சென்ற மனோகுமார் சொத்தவிளையில் உள்ள தோப்பில் கைகள் கட்டப்பட்ட

    நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து சுசீந்திரம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜெயசந்திரபாமா, அவரது தந்தை பிச்சை, சகோதர்கள் ஜெயசெல்வஅருண், ஜெயசந்திரகுமார்

    ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.

    இவர்களில் ஜெயசந்திரபாமா (30), ஜெயசெல்வ அருண் (27), ஜெயசந்திரகுமார் (29) ஆகிய மூவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். தலைமறைவான பிச்சையை

    போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai