Enable Javscript for better performance
மணல் கடத்தல்: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கொல்லங்கோடு அருகே கேரளத்துக்கு மணல் கடத்தவிருந்த லாரியை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். லாரி கிளீனரும் கைது

    செய்யப்பட்டார்.

    கொல்லங்கோடு அருகே கேரளத்துக்கு லாரியில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாலமன்ராஜா தலைமையிலான போலீஸார் சூழால் சோதனைச் சாவடி அருகே வாகன கண்காணிப்பில்

    ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வேகமாக வந்த லாரியை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால்,  ஓட்டுநர் லாரியை வேகமாக இயக்கி போலீஸார் மீது மோத வந்தார்.

    இதையடுத்து போலீஸார் சுதாரித்து விலகினர்.

    பின்னர் அப்பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர், கிளீனர் ஆகியோர் தப்பியோட முயன்றனர். எனினும் போலீஸார் துரத்திச் சென்று கிளீனரை பிடித்தனர்.

    அவரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட கிளீனர் நித்திரவிளை அருகேயுள்ள பணமுகம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai